Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கூட்டமைப்பின் பிரிவு எம் இனத்திற்கான துரோகம்: கோகுலகுமார் அஞ்சலா

In இலங்கை
Updated: 09:12 GMT, Jan 8, 2018 | Published: 06:02 GMT, Jan 8, 2018 |
0 Comments
1228
This post was written by : Risha

தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலிருந்து தனியாக பிரிந்து நிற்பது நாம் எமது இனத்துக்கு செய்யும் மாபெரும் துரோகம் என வவுனியா தெற்கு பிரதேச சபையில் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் கோகுலகுமார் அஞ்சலா தெரிவித்தார்.

வவுனியா விளக்குவைத்தகுளம் கிராமத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற பிரசார கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”கூட்டமைப்பு உடைந்து போனாலோ, கூட்டமைப்பிலிருந்து யாரும் வெளியேறிச் சென்றாலோ தமிழ் மக்கள் மகிழ்சியடைய மாட்டார்கள். ஆனால் பேரினவாதிகள் மகிழ்ச்சியடைவார்கள். அவர்களை மகிழ்ச்சிப்படுத்தவா நாம் போராடினோம்?

உயிர்களை இழந்து தியாகங்களை செய்தோம். எமக்குள் ஒற்றுமை குலைந்தால் எமது உரிமைப் போராட்டத்தை வென்றெடுக்க முடியுமா? தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பது மிகப் பெரியதொரு கூட்டுக்குடும்பம்.

எமக்குள்ளே ஏற்படும் பிரச்சனைகளை பேசி தீர்க்க முடியாவிட்டால் எப்படி எம்மால் அரசாங்கத்தோடு பேசி எமது மக்களின் பிரச்சனைகளை தீர்க்கமுடியும்.

கூட்டமைப்புக்கு வாக்களியுங்கள், ஒற்றுமைக்கு வாக்களியுங்கள், உரிமைக்கு வாக்களியுங்கள் என்று கடந்த 18 வருடங்களுக்கு மேலாக எமது மக்களிடம் வாக்கு கேட்டவர்;களெல்லாம், இப்போது கூட்டமைப்புக்கு எதிராக செயற்படுகின்றனர்.

பெரும்பான்மை மக்களும், அரசாங்கமும் மகிழ்ச்சியடையும் வகையில் நமது ஒற்றுமையை சீர்குலைக்கக் கூடாது. எனவே பிரிந்தவர்கள் எல்லாம் மீண்டும் கூட்டமைப்பில் இணைந்து கொள்ளவேண்டும்” என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg