Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐந்தாவது நாளாகவும் தொடரும் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம்!

In இந்தியா
Updated: 06:44 GMT, Jan 8, 2018 | Published: 06:44 GMT, Jan 8, 2018 |
0 Comments
1153
This post was written by : Kemasiya

தமிழகத்தில் போக்குவரத்து ஊழியர்கள் தொடர்ந்து ஐந்தாவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறனர்.

சென்னை மற்றும் திருச்சி, சேலம் ஆகிய மாவட்டங்கள் உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று (திங்கட்கிழமை) இத் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

சம்பள உயர்வை வலியுறுத்தி ஐந்தாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வரும் இப்போராட்டத்தில்,  “தமது கோரிக்கைகளை ஏற்று முதல்வர் நேரில் வந்து பேச வேண்டும். மக்கள் படும் போக்குவரத்து இன்னலை போக்குவதற்கு அரசு தமது இன்னலை போக்க முன்வர வேண்டும்” எனக் கோஷங்களை எழுப்பி வருகிறனர்.

கடந்த 4ஆம் திகதி முதல் தமிழகத்தின் அரச போக்குவரத்து ஊழியர்கள் சம்பள உயர்வை கோரி போராட்டத்தை முன்னெடுத்துவருவதனால் தமிழக மக்களின் பயணங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg