Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மத்திய அரசிற்கு நன்றி தெரிவித்த ஆளுநர் சில கோரிக்கைகளை முன்வைத்தார்!

In இந்தியா
Updated: 07:24 GMT, Jan 8, 2018 | Published: 07:24 GMT, Jan 8, 2018 |
0 Comments
1153
This post was written by : Kemasiya

ஆழ்கடல் மீன்பிடிக்கு நிதி உதவியளித்த மத்திய அரசிற்கு நன்றி தெரிவித்து கொள்வதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.

இன்று (திங்கட்கிழமை) ஒன்று கூடிய தமிழக சட்டசபைக்கூட்டத்தில் உரையாற்றிய ஆளுநர் மேற்படி தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

“இந்திய மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் ஓரளவு குறைந்துள்ளது. கச்சதீவை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்துடன் காவிரி மேலாண்மை வாரியப் பிரச்சினையை சீர்செய்ய, காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழுவை மத்திய அரசு விரைந்து அமைக்க வேண்டும்” என வலியுறுத்தியிருந்தார்.

மேலும் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதற்கு தமிழக அரசு முயற்சித்துவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg