Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மன்னார் பொது வைத்தியசாலையில் வைத்திய நிபுணர்கள் பற்றாக்குறை: சுகாதார அமைச்சர்

In இலங்கை
Published: 07:15 GMT, Jan 8, 2018 |
0 Comments
1055
icon_com
This post was written by : Risha

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் தொடர்ந்தும் வைத்திய நிபுணர்களுக்கான பற்றாக்குறை நிலவுவதாகவும், அதனால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்குவதாகவும் வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் நிலவரம் தொடர்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”ஒரு சிகிச்சைப்பிரிவில் ஆகக்குறைந்தது இரண்டு வைத்திய நிபுணர்களேனும் நியமிக்கப்பட வேண்டும்.

பிரதானமாக குழந்தைகள் சிகிச்சைப்பிரிவு, மகப்பேற்று சிகிச்சைப்பிரிவு, அறுவைச் சிகிச்சைப் பிரிவு, பொது மருத்துவம் மற்றும் அறுவைச்சிகிச்சை கூடங்கள் ஆகியவற்றுக்கு வைத்திய நிபுணர்கள் நியமிக்கப்படுவது அவசியம்.

கடந்த மாதம் மகப்பேற்று நிபுணர் விடுமுறையில் இருந்த காலங்களில் பதில் மகப்பேற்று நிபுணர் இல்லாத காரணத்தினால் பல கர்ப்பிணித்தாய்மார்கள் பிரசவத்திற்காக மன்னாரிலிருந்து வவுனியா மற்றும் யாழ் வைத்தியசாலைகளுக்கு இடமாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டது.

இதன்போது பல தாய்மார்கள் அம்புலன்ஸ் வண்டியினுள் குழந்தைகளை பிரசவித்துள்ள நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் சுமார் 15 பிரசவங்கள் இவ்வாறு நிகழ்ந்துள்ளது.

இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகத்துடன் தொடர்பு கொண்டு இங்குள்ள நிலைமையை நான் தெளிவுபடுத்தியுள்ளேன்.

அதன்படி, உடனடியாக செயற்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுள்ளேன். நாங்கள் தொடர்ந்தும் அவதானித்து வருகின்றோம். மேலதிகமாக என்ன செய்ய முடியும் என ஆலோசித்து வருகின்றேன் என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)