Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

போக்குவரத்து துறையை லாபத்தில் இயக்க தனியார் பேரூந்துகளும் அவசியம்: தமிழிசை

In இந்தியா
Published: 07:52 GMT, Jan 8, 2018 |
0 Comments
1079
This post was written by : Kemasiya
vbnfghfgh

போக்குவரத்து ஊழியர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணவும், மக்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்களைப் போக்கவும் தனியார் பேரூந்துகளின் தேவை அவசியம் என, தமிழகத்தின் பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவின் மூலமே மேற்படி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர்,

“நான்கு பேரூந்துகளை வைத்திருக்கும் தனியார் முதலாளியினால் லாபம் ஈட்ட முடிகிறது. அப்படியிருக்கையில் 40,000 பேரூந்துகளுக்கு மேல் இயக்கும் அரசு பல லட்சம் கோடிகள் நஷ்டம் எனத் தெரிவித்து தொழிலாளர்களை வதைக்கலாமா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன் தொடரும் இந்தப் போராட்டம், அதனால் மக்கள் எதிர்நோக்கும் அவதி என்பவற்றிற்கு, பேரூந்துகளை அரசுடமை ஆக்கி நஷ்டத்தில் இயக்கும் திரவிட கட்சி ஆட்சியாளர்கள் தான் காரணம்” என்றும் கூறியுள்ளார்.

மேலும் நஷ்டத்தில் இயங்கும் போக்குவரத்துதுறையை லாபத்தில் இயக்க, தொழிலாளர்களையும் பங்குதாரர்களாக மாற்றி நிர்வாகத்தை சீரமைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ghnfghn vxcdfgdrbvg xgfsdgrfg

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)