Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பதவியில் நீடிக்க முடியாது: இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவர்

In கிாிக்கட்
Updated: 12:19 GMT, Jan 8, 2018 | Published: 09:45 GMT, Jan 8, 2018 |
0 Comments
1414
This post was written by : Puvanes

இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமதிபால பதவிக்காலத்தினை மேலும் 2 வருடங்கள் நீடிக்க வேண்டும் என விடுக்கப்பட்ட கோரிக்கையினை அவர் நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இலங்கை கிரிக்கட் சபையின் மேல்மாகாண உறுப்பினர்களின் கூட்டத்தின் போது திலங்க சுமதிபால தனது பதவிக்காலத்தினை 2 வருடங்கள் நீடித்துக்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனினும் தனிப்பட்ட காரணங்களினால் திலங்க சுமதிபால குறித்த கோரிக்கையினை நிராகரித்துள்ளதாகவும், தொடர்ந்து பதவியில் இருக்க விருப்பமில்லை எனத் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

தற்போது பொதுவான கிரிக்கெட் விதிகளின்படி கிரிக்கெட் சபைத் தலைவரது பதவிக்காலம் என்பது 4 வருடங்களாகவே உள்ளது. எனினும் இலங்கை கிரிக்கெட் வாரிய விதிமுறைக்கமைய குறித்த பதவியானது 2 ஆண்டுகள் மட்டுமே இதன் காரணமாகவே திலங்க சுமதிபால பதவி நீட்டிப்பை மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, எதிர்வரும் மே மாதம் 26ஆம் திகதியுடன் திலங்க சுமதிபாலவின் 2 வருட பதவிக்காலம் நிறைவுக்குவருகின்றது என்பது சுட்டிக்காட்டப்படத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg