Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரசிகர்கள் முக்கிய காரணமாக இருந்துள்ளனர்: சூர்யா

In சினிமா
Published: 10:41 GMT, Jan 8, 2018 |
0 Comments
1067
This post was written by : Arul Jesu

சூர்யா மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகவுள்ள படம் தானா சேர்ந்த கூட்டம்.

ஸ்டூடியோ கிறீன் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு கடந்த வெள்ளிக்கிழமை (05.01.2018) நடைபெற்றது.

இதில் சூர்யா, தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல்ராஜா, கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன் தம்பி ராமையா, சுரேஷ் மேனன், இயக்குநர் விக்னேஷ் சிவன், ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன், கலை இயக்குநர் கிரண் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்.

இதன் போது சூர்யா பேசுகையில்:
‘அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். அனைவருக்கும் எல்லா கனவுகளும் சிறப்பாக நிறைவேற வேண்டும்.

நமது துறையிலிருந்து அடுத்த பயணத்தை துவங்கயிருக்கும் ரஜினி சார் அவர்களுக்கும், கமல் சார் அவர்களுக்கும், விஷால் அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். எல்லோருடைய வரவும் நல்வரவாக இருக்கவேண்டும். எங்கள் அனைவரின் ஆதரவும் அவர்களுக்கு உண்டு.

இப்போது விக்னேஷ் சிவன் கூறியது போன்று எப்படி எனக்கு ஓவ்வொரு இயக்குநர்களும் முக்கியமோ அதைப் போலவே என்னுடைய வாழ்கைக்கு ஓவ்வொரு தயாரிப்பாளர்களும், அதில் பணிபுரிந்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் முக்கியம்.

இதனால் தான் 35, 36ஆவது படங்களை நல்ல படங்களாக கொடுக்க முடிந்துள்ளது என்று தைரியமாக சொல்ல முடியும்.

அதற்கு தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் தான் காரணமாக இருந்துள்ளனர்.

அத்தோடு எனது வெற்றிகளுக்கு ரசிகர்கள் நிச்சயமாக முக்கிய காரணமாக இருந்துள்ளனர்’ என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)