Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தனது இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கு கட்டுப்பாடு விதித்த கமல்ஹாசன்!

In இந்தியா
Updated: 11:00 GMT, Jan 8, 2018 | Published: 11:00 GMT, Jan 8, 2018 |
0 Comments
1219
This post was written by : Kemasiya

மக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறுவிளைவிக்கும் எந்த ஆர்ப்பாட்டத்திலும் தனது இயக்கத்தை சேர்ந்தவர்கள் ஈடுபடக்கூடாது என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இன்று (திங்கட்கிழமை) அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவிலேயே மேற்படி தெரிவித்துள்ளார்.

“விதிகளை மதியாத இயக்கத் தொண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் நிலையை தலைமைக்கு தலைவாய் ஏற்படுத்தாதீர்கள். ஆக்க பூர்வமான வேலைகள் நிறைய இருக்கின்றன.” என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து ஊழியர்கள் தொடர் போராட்டத்தை நடத்திவரும் நிலையில், குறித்த போராட்டம் மக்களுக்கும், விதிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக பலரும் கருத்து வெளியிட்டு வருகிறனர்.

இந்நிலையில் தனது இயக்கத்தை சேர்ந்தவர்களிடம் நடிகர் கமல்ஹாசன் மேற்படி வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg