Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் வெற்றியை தென்னாபிரிக்கா பதிவு செய்தது!

In கிாிக்கட்
Updated: 15:46 GMT, Jan 8, 2018 | Published: 15:45 GMT, Jan 8, 2018 |
0 Comments
1722
This post was written by : Surenth

இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில், தென்னாபிரிக்க அணி 72 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

கடந்த ஐந்தாம் திகதி தென்னாபிரிக்காவின் கேப்டவுணில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது டெஸ்ட் போட்டியின் நான்காவது நாளான இன்று இந்திய அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து தோல்வியை தழுவிக்கொண்டது.

இந்தத் தொடரின் முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, சகல விக்கெட்டுக்களையும் இழந்து 286 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

தென்னாபிரிக்க அணி சார்பில், ஏ பி டி வில்லியர்ஸ் 65 ஓட்டங்களையும் டூ ப்லஸிஸ் 62 ஓட்டங்களையும் குயிண்டன் டி கொக் 43 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். இந்திய அணியின் பந்துவீச்சில், புவனேஸ்வர் குமார் 4 விக்கெட்டுக்களையும் அஸ்வின் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.

இந்த நிலையில், தனது முதலாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இந்திய அணி, சகல விக்கெட்டுக்களையும் இழந்து 209 ஓட்டங்களை பெற்றது. இந்திய அணியின் துடுப்பாட்டத்தில், ஹார்திக் பாண்டியா 93 ஓட்டங்களையும் புஜாரா 26 ஓட்டங்களையும் புவனேஸ்வர் குமார் 25 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

தென்னாபிரிக்க அணியின் பந்துவீச்சில், பிலண்டர் மற்றும் ரபாடா ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்களையும் ஸ்டெயின் மற்றும் மோர்னி மோர்கல் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.

இதனையடுத்து 77 ஓட்டங்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த தென்னாபிரிக்க அணி, வெறுமனே 130 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. தென்னாபிரிக்க அணி சார்பில், ஏ பி டி வில்லியர்ஸ் 35 ஓட்டங்களையும் மெக்ரான் 34 ஓட்டங்களையும் எல்கர் 25 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

இந்திய அணியின் பந்துவீச்சில், பூம்ரா மற்றும் ஷாமி ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்களையும் புவனேஸ்வர் குமார் மற்றும் ஹார்திக் பாண்டியா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.

207 என்ற வெற்றி இலக்குடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இந்திய அணி, சகல விக்கெட்டுக்களையும் இழந்து 135 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 72 ஓட்டங்களால் தோல்வியடைந்துள்ளது.

இந்திய அணியின் துடுப்பாட்டத்தில், அஸ்வின் 37 ஓட்டங்களையும், விராட் கோஹ்லி 28 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுக்க, தென்னாபிரிக்க அணியின் பந்துவீச்சில், பிலண்டர் 6 விக்கெட்டுக்களையும் மோர்னி மோக்கல் மற்றும் ரபாடா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg