Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காத்தான்குடியில் வீடு புகுந்து 35 பவுண் தங்க நகைகள் திருட்டு

In இலங்கை
Published: 03:20 GMT, Jan 9, 2018 |
0 Comments
1053
icon_com
This post was written by : Varothayan
vector-thief

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி நகரில் உள்ள வீடு ஒன்றில் 35 பவுண்கள் தங்க ஆபரணங்கள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காத்தான்குடி-05, பழைய கல்முனை வீதியில் உள்ள வீடு ஒன்றிலேயே நேற்று (திங்கட்கிழமை) அதிகாலை வேளையில் இத்திருட்டுச் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த வீட்டில் இரு பெண்கள் மாத்திரம் உறங்கிக்கொண்டிருந்த வேளையில் வீட்டின் பின் கதவை உடைத்து உள்ளே சென்ற திருடன் குறித்த நகைகளை திருடிச்சென்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்றும் மேலதிக விசாரணைகளை துரிதப்படுத்தியுள்ளதாகவும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)