Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒலிம்பிக் போட்டி: வடகொரியா – தென்கொரியா பேச்சுவார்த்தை ஆரம்பம்

In உலகம்
Published: 04:08 GMT, Jan 9, 2018 |
0 Comments
1084
icon_com
This post was written by : Suganthini

குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியக் குழுவினர் கலந்துகொள்வது தொடர்பாக, வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்கிடையிலான உயர்மட்டக் கலந்துரையாடல் பன்முன்ஜொம் கிராமத்திலுள்ள சமாதான இல்லத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை)ஆரம்பமாகியுள்ளது.

வடகொரியாவின் ஹ்வாங்கே (Hwanghae ) மாகாணத்திலுள்ள பன்முன்ஜொம் கிராமத்தில் அமைந்துள்ள சமாதான இல்லத்தில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது.

வடகொரியாவின் உயர்மட்டக் குழுவில், சிரேஷ்ட பேச்சுவார்த்தையாளரும் தென்கொரிய விவகாரங்களுக்கான வடகொரியாவின் அரச நிறுவனத் தலைவருமான றி சொன் குவான் (Ri Son gwon) தலைமையில் 5 பேர் கலந்துகொண்டுள்ளனர்.  இதேவேளை, தென்கொரியாவின் உயர்மட்டக் குழுவில், தென்கொரிய ஒருங்கிணைப்பு அமைச்சர் சோ மியோங் ஜியன் (Cho Myoung-gyon) தலைமையில் 5 பேர் கலந்துகொண்டுள்ளனர்.

தென்கொரியாவில் எதிர்வரும் பெப்ரவரியில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்வது தொடர்பாகக் கவனஞ்செலுத்துவதாக, வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன் புத்தாண்டுச் செய்தியில் சாதகமான சமிக்ஞையை வெளியிட்டிருந்தார்.

இதனைக் கவனத்திற்கொண்ட தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே, ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்வது தொடர்பாக இரு நாடுகளுக்கிடையிலான உயர்மட்டக் கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில், இக்கலந்துரையாடல் இன்று ஆரம்பமாகியுள்ளது.

வடகொரியாவுடனான கூட்டுப் பொருளாதாரத் திட்டத்தை தென்கொரியா நிறுத்தியமை, வடகொரியாவின் அணுவாயுதம் மற்றும் ஏவுகணைச் சோதனைகள் ஆகியவை காரணமாக தென்கொரியாவுக்கும் வடகொரியாவுக்குமிடையிலான உறவு பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த இரு நாடுகளுக்குமிடையில் கடந்த 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, இதுவரையில் எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்தப் பேச்சுவார்த்தையின்போது கொரிய உறவு தொடர்பாக கவனஞ்செலுத்தவுள்ளதாக, தென்கொரியா தெரிவித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)