Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மெரினா புரட்சி: பெர்ஸ்ட் லுக் வெளியீடு

In சினிமா
Published: 04:25 GMT, Jan 9, 2018 |
0 Comments
1086
This post was written by : Arul Jesu
Jallikattu

இயக்குநர் பாண்டிராஜ் தயாரிக்கின்ற ‘மெரினா புரட்சி’ படத்தின் ‘பெர்ஸ்ட் லுக்’ நேற்று (திங்கட்கிழமை) வெளியிடப்பட்டுள்ளது. இதன் ‘பர்ஸ்ட் லுக்’ படத்தை நடிகர்கள் சிவகார்த்திகேயன், சதீஷ், சூரி ஆகியோர் தங்களது டுவிட்டர் பக்கங்களில் வெளியிட்டுள்ளமை மேலும் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

‘பசங்க’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான பாண்டிராஜ், ‘வம்சம்’, ‘மெரினா’, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘பசங்க 2′, ‘கதகளி’, ‘இது நம்ம ஆளு’ போன்ற பல படங்களை இயக்கியுள்ளார்.

தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘பசங்க புரொடக்ஷன்ஸ்’ மூலம் ஐந்து படங்களைத் தயாரித்துள்ள அவர் தற்போது ‘மெரினா புரட்சி’ என்ற தலைப்பில் புதிய படத்தை தயாரித்து வருகின்றார்.

குறிப்பாக கடந்த வருடம் ஜனவரி 8ஆம் திகதி ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக மெரினாவில் தொடங்கிய போராட்டத்தை மையப்படுத்தியதாக இந்த ‘மெரினா புரட்சி’ படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

எம்.எஸ்.ராஜ் இயக்குகின்ற இந்தப் படத்திற்கு ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவாளராகவும், அல்ருஃபியான் இசையமைப்பாளராகவும், தீபக் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றி வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)