Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மண்முனைப்பற்றைச் சூழ இடம்பெறும் நில ஆக்கிரமிப்பை தடுக்க வேண்டும்: சந்திரமோகன்

In இலங்கை
Updated: 04:51 GMT, Jan 9, 2018 | Published: 04:51 GMT, Jan 9, 2018 |
0 Comments
1130
This post was written by : Varothayan

மண்முனைப்பற்று பிரதேசத்தை சூழ நடைபெற்றுவரும் நில ஆக்கிரமிப்பினை தடுத்து நிறுத்துவதற்காகவே உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் தான் களமிறங்கியுள்ளதாக, சுயேட்சைக்குழு ஒன்றில் ஆரையம்பதி இரண்டாம் வட்டாரத்தில் போட்டியிடும் தம்பிராஜா சந்திரமோகன் தெரிவித்தார்.

இன்று (செவ்வாய்க்கிழமை) காலை ஆரையம்பதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து பேசிய சந்திரமோகன், மண்முனைப்பற்றில் தமிழரசுக்கட்சியின் நீண்டகால உறுப்பினராக நான் இருந்தேன். எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆசனப்பங்கீட்டில் மண்முனைப்பற்று பிரதேசபையின் ஆட்சியை புளொட் இயக்கத்திற்கு வழங்க தீர்மானிக்கப்பட்டதை நாங்கள் எதிர்க்கின்றோம்.

அதன் காரணமாக மண்முனைப்பற்றில் சுயேட்சைக்குழு 01ஐ அமைத்து தேர்தலில் போட்டியிடுகின்றோம்.

மண்முனைப்பற்றினை சூழ இன்று நில ஆக்கிரமிப்புகள் நடைபெற்று வருகின்றன. ஆற்றில் குப்பைகளை கொட்டி ஆற்றை நிரப்பி இடம்பிடிக்கின்றனர். இவற்றினையெல்லாம் தடுக்கவேண்டும் என்பதற்காகவே நாங்கள் சுயேட்சைக்குழுவினை அமைத்து தேர்தலில் போட்டியிடுகின்றோம் -என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg