Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கச்சதீவு வருடாந்த உற்சவ ஏற்பாடுகள் தொடர்பில் ஆரம்பக் கலந்துரையாடல்

In இலங்கை
Updated: 05:06 GMT, Jan 9, 2018 | Published: 05:06 GMT, Jan 9, 2018 |
0 Comments
1174
This post was written by : Varothayan

வரலாற்றுச் சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளமையினால், அதற்குரிய ஆரம்பக் கலந்துரையாடல் யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்று வருகின்றது.

இந்தக் கலந்துரையாடல் இன்று (செவ்வாய்க்கிழமை) யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் காலை 9.45 மணியளவில் ஆரம்பமாகியது.

இதில், யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுகுணரதி தெய்வேந்திரம், கடற்படை மற்றும் நெடுந்தீவு பங்குத்தந்தை, பொலிஸ் உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபையினர் உள்ளிட்டோருடன் போக்குவரத்து, உணவு, சுகாதாரம், படகுச் சேவைகள் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருகின்றது.

IMG20180109094349 IMG20180109094402

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg