Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பணிக்கு திரும்பாதவர்கள் மீது நடவடிக்கை! – போக்குவரத்து அமைச்சர் தீர்மானம்

In இந்தியா
Updated: 05:58 GMT, Jan 9, 2018 | Published: 05:58 GMT, Jan 9, 2018 |
0 Comments
1111
This post was written by : Kemasiya

இன்றைய தினம் பணிக்கு திரும்பாத போக்குவரத்து ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென, போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்களை சந்தித்து கருத்து தெரிவித்த அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும், போக்குவரத்து ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அரசாங்கம் தயாராகவே உள்ளதென அமைச்சர் சுட்டிக்காட்டினார். எனினும், தம்மை முதலமைச்சர் நேரில் வந்து சந்திக்க வேண்டுமென போக்குவரத்து ஊழியர்கள் எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டார். இவ்வாறு கௌரவம் பார்ப்பதை கைவிட்டு, அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஊழியர்கள் முன்வர வேண்டும் என அமைச்சர் விஜயபாஸ்கர் மேலும் குறிப்பிட்டார். எவ்வாறாயினும், இன்றைய தினம் அனைவரும் பணிக்கு திரும்ப வேண்டும் என்றும், இல்லாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதேவேளை, ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கான ஓய்வூதியம் வழங்கும் நடவடிக்கை விரைவில் முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.

சம்பள உயர்வை வலியுறுத்தி தமிழக போக்குவரத்து ஊழியர்கள், கடந்த 4ஆம் திகதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில்  ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg