Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

‘காயம்குளம் கொச்சுண்ணி’ – முக்கிய வேடத்தில் மலையாள சூப்பர்ஸ்டார்!

In சினிமா
Updated: 07:27 GMT, Jan 9, 2018 | Published: 07:10 GMT, Jan 9, 2018 |
0 Comments
1137
This post was written by : Arul Jesu

நிவின் பாலி நடித்துள்ள வரலாற்றுத்திரைப்படமான ‘காயங்குளம் கொச்சுண்ணி’ என்ற திரைப்படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிப்பதாக நடிகர் நிவின்பாலி குறிப்பிட்டுள்ளார்.  நேற்று (திங்கட்கிழமை) வெளியிட்ட டுவிட்டர் பதிவில் அவர் இவ்விடயத்தைக் கூறியுள்ளார்.

ஸ்ரீகோகுலம் மூவிஸ் சார்பில் கோகுலம் கோபாலன் தயாரிக்கும் படம் ‘காயம்குளம் கொச்சுண்ணி’. ரோஷன் ஆன்ரூஸ் இயக்கத்தில் நிவின் பாலி மற்றும் பிரியா ஆனந்த் நடிப்பில் இந்தப் படம் உருவாகி வருகிறது.

19ஆம் நூற்றாண்டில் கேரளாவில் உள்ள காயம்குளம் பகுதியில் வாழ்ந்த ஒருவரை பற்றிய வரலாற்றுப்படமாக இத்திரைப்படம் உருவாகி வருகின்றது. இவர் ரொபின்ஹுட் போல செல்வந்தர்களிடம் இருந்து பணம், பொருட்களை பறித்து ஏழை மக்களுக்கு வழங்கி வந்துள்ளார். மேலும் 1859இல் கொச்சுண்ணி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பூஜப்புரா சிறையில் அடைக்கப்பட்டு அங்கேயே இயற்கை எய்தினார். இவ்வாறு, இவருடைய வாழ்க்கையில் இடம்பெற்ற சம்பவங்களை மையமாக வைத்தே இந்தப்படம் தயாரிக்கப்படுகிறது.

இதில் கொச்சுண்ணியாக நிவின் பாலி நடிக்க, கொச்சுண்ணியின் மனைவியாக ப்ரியா ஆனந்த் நடிக்கிறார். அத்தோடு மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால், முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக நிவின் பாலி அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

பாபி மற்றும் சஞ்சய் ஆகியோர் இந்த படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளனர். அத்தோடு ’36 வயதினிலே’ படத்தை இயக்கிய ரோஷன் ஆன்ட்ரூஸ் இந்த படத்தை இயக்கும் அதேவேளை, பினோத் பிரதான் ஒளிப்பதிவு செய்ய, கோபி சுந்தர் இசையமைக்கின்றார்.

Untitled

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg