Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வடகொரியா சம்மதம்

In உலகம்
Published: 07:31 GMT, Jan 9, 2018 |
0 Comments
1133
icon_com
This post was written by : Suganthini

தென்கொரியாவில் எதிர்வரும் பெப்ரவரியில் நடைபெறும் 2018ஆம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் தமது குழு பங்கேற்கவுள்ளதாக, வடகொரியா அறிவித்துள்ளது.

ஒலிம்பிக் போட்டியில் வடகொரியக் குழுவினர் கலந்துகொள்வது தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடல், வடகொரிய மற்றும் தென்கொரிய உயர்மட்டக் குழுவினர்களுக்கிடையில் பன்முன்ஜொம் கிராமத்திலுள்ள சமாதான இல்லத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. இதன்போதே, வடகொரியா தமது நாட்டுக் குழுவை அனுப்பச் சம்மதித்துள்ளது.

விளையாட்டு வீரர்கள், ஆதரவாளர்கள், கலைஞர்கள் உள்ளிட்டோர் அக்குழுவில் அடங்குகின்றனர். இவர்களுடன் அவதானிகளும் ஊடகவியலாளர்களும் இணையவுள்ளதாகவும், வடகொரியா தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஒலிம்பிக் போட்டியின் ஆரம்ப நிகழ்வில் இரண்டு கொரியர்களும் இணைந்து அணிவகுப்பில் ஈடுபட வேண்டுமென, தென்கொரியா கூறியுள்ளது. இருப்பினும், இதற்கு வடகொரியா எவ்வாறு பதிலளித்துள்ளது என்பது தொடர்பாக இதுவரையில் தெரியவில்லை.

கடந்த 2006ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில், இரண்டு கொரியர்களும் இணைந்து கொரிய தீபகற்பக் கொடியைத் தாங்கிக்கொண்டு அணிவகுப்பில் ஈடுபட்டிருந்தனர். ஒலிம்பிக் போட்டியில் இரண்டு கொரியர்களும் இணைந்து அணிவகுப்பில் ஈடுபட்டமை இதுவே இறுதிச் சந்தர்ப்பமென்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், வடகொரியாவுடன் ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தை நடத்த தென்கொரியா முன்மொழிந்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)