Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழ் இளைஞர்கள் கடத்தல் விவகாரம்: சந்தேகநபர்களுக்கு பிணை!

In இலங்கை
Updated: 09:23 GMT, Jan 9, 2018 | Published: 08:04 GMT, Jan 9, 2018 |
0 Comments
1124
This post was written by : Varshini
DKP-Dassanayake-640x360

கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டிருந்த கடற்படையின் முன்னாள் பேச்சாளர் டி.கே.பி.தஸநாயக்க உள்ளிட்ட ஆறு சந்தேகநபர்களும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 2008 மற்றும் 2009ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற இக்கடத்தல் சம்பவம் தொடர்பான விசாரணை, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. இதன்போது, அறுவரையும் தலா ஒரு இலட்சம் ரூபாய் ரொக்கப்பிணை மற்றும் ஒரு மில்லியன் ரூபாய் பெறுமதியான மூன்று சரீரப்பிணைகளில் நீதிபதி மணிலால் வைத்தியரத்ன விடுவித்துள்ளார்.

கடந்த 2008ஆம் மற்றும் 2009ஆம் ஆண்டு காலப்பகுதியில், கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் செய்யப்பட்டனர். கடந்த ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில், நல்லாட்சி அரசாங்கத்தில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பிரகாரம் கடற்படையின் முன்னாள் பேச்சாளர் உள்ளிட்ட அறுவர் கடந்த வருடம் ஜூலை மாதம் 12ஆம் திகதி குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டனர்.

சுமார் 6 மாத காலமாக குற்றப்புலனாய்வு பிரிவினர் நடத்திய விசாரணையில், குறித்த இளைஞர்கள் திருகோணமலை கடற்படை முகாமுக்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாக நீதிமன்றில் ஏற்கனவே அறிக்கை சமர்ப்பித்தனர்.

அத்தோடு, குறித்த இளைஞர்கள் அனைவரும் பணத்திற்காகவே கடத்தப்பட்டனர் என பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்தது. இந்நிலையில், தற்போது சந்தேகநபர்களுக்கு தற்போது பிணை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)