Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கச்சதீவு திருவிழாவில் இந்திய யாத்திரீகர்களும் பங்கேற்பர்: யாழ். அரச அதிபர்

In இலங்கை
Published: 09:01 GMT, Jan 9, 2018 |
0 Comments
1106
This post was written by : Varothayan

வரலாற்றுச் சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா எதிர்வரும் பெப்ரவரி மாதம் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள நிலையில், இம்முறை இலங்கை, இந்திய நாடுகளில் இருந்தும் அதிகளவான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.

கச்சதீவு திருவிழாவுக்கான முன்னாயத்த கலந்துரையாடல் இன்;று (செவ்வாய்க்கிழமை) யாழ். மாவட்ட அரச அதிபர் தலைமையில் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. அது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

யாழ். அரச அதிபர் மேலும் தெரிவிக்கையில், “கச்சதீவில் இம்முறை இரு நாட்டில் இருந்தும் அதிகளவான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் இந்தமுறை இலங்கையில் இருந்து 10 ஆயிரம் பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு ஏற்ற வகையில் விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறன.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 23 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இருந்து குறிகட்டுவன் வரையான பேரூந்து சேவை, அதிகாலை 4 மணியில் இருந்து நண்பகல் 1 மணி வரை நடைபெறும். அதேபோன்று குறிகட்டுவனில் இருந்து கச்சதீவு வரை காலை 5.00 மணிக்கு ஆரம்பித்து 2 மணி வரை படகுச் சேவை நடைபெறும்.

படகுச்சேவைக்கான ஒருவழிக் கட்டணமாக 300 ரூபாய் அறவிடப்படவுள்ளது. நெடுந்தீவில் இருந்து கச்சதீவுக்கு ஒரு வழிக் கட்டணமாக 225 ரூபாய் அறவிடப்படவுள்ளது” என்றார்.

கடந்த வருடம் கச்சதீவுத் திருவிழாவை இந்திய யாத்திரீகர்கள் புறக்கணித்திருந்தனர். தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் கைது செய்யப்படுவதும், தடுத்து வைக்கப்படுவதும் தொடர்கதையாகிவரும் நிலையில், அதனைக் கண்டிக்கும் வகையில் இந்த புறக்கணிப்பை யாத்திரீகர்கள் மேற்கொண்டனர்.

இதனால், திருவிழாவும் சோபையிழந்து போனது. இந்திய யாத்திரீகர்களுக்கு விற்பதற்கென கடைபரப்பிய வியாபாரிகளும் ஏமாந்து போயினர். எனவே, இதுவரை இந்தியாவில் இருந்து கச்சதீவு திருவிழாவுக்கு எவ்வித எதிர்ப்புக்களும் வெளிப்படாத நிலையில், இம்முறை அவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)