Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

‘பிராணா’ படம் கௌரி லங்கேஷ் பற்றியதா? : நித்யா மேனன் பதில்

In சினிமா
Updated: 10:01 GMT, Jan 9, 2018 | Published: 10:01 GMT, Jan 9, 2018 |
0 Comments
1182
This post was written by : Arul Jesu

வி.கே.பிரகாஷ் தயாரிக்கும் ‘பிராணா’ திரைப்படம் பிரபல பத்திரிகையாளர் கௌரி லங்கேஸ் கொலை வழக்கு கதையை மையமாக தயாரிக்கப்படுகின்றதா? என்ற கேள்விக்கு நித்யா மேனன் பதிலளித்துள்ளார்.

மேலும் கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி பெங்களுரில் வைத்து பிரபல பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்டார். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவம் குறித்து நடிகர்கள் பலரும் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் ‘பிராணா’ என்ற திரைப்படம் நான்கு மொழிகளில் உருவாகிவருகின்றது. இதில் எழுத்தாளர் வேடத்தில் நித்யாமேனன் நடிக்கிறார். இதுதொடர்பில் நித்யாமெனனிடம் நிரூபர்கள் கேள்வியெழுப்பிருந்தனர்.

பிராணா திரைப்படத்தில் எழுத்தாளர் கதாபாத்திரத்தில் நீங்கள் நடிக்கிறீர்கள். இது கவுரி லங்கேஷ் கொலை வழக்கை மையமாக கொண்ட கதையா? கௌரி லங்கேஷ் வேடத்தில் நீங்கள் நடிக்கிறீர்களா? என்று நித்யாமேனனிடம் கேட்டனர்.

இது தொடர்பில் நித்யா மேனன் கூறியது:
‘பிராணா திரைப்படம் நான்கு மொழிகளில் உருவாகின்றது. ஒவ்வொரு மொழியிலும் தனித்தனியாக நான்கு முறை நடிக்க வேண்டியிருப்பதால் மிகுந்த சிரமத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

இதுபோல் வேறு யாரும் நடித்திருக்கிறார்களா என்பது எனக்குத் தெரியவில்லை. எழுத்தாளரின் எழுத்துரிமையை மையமாக வைத்தே இக்கதை எழுதப்பட்டிருக்கிறது.

ஆனால் இது கவுரி லங்கேஷ் கதையை சார்ந்ததாக இருப்பினும் இப்படத்திற்கான தயாரிப்பு பணிகள் கௌரி லங்கேஷ் கொல்லப்படுவதற்கு நான்கு மாதங்களுக்கு முன்பே தொடங்கிவிட்டன. அந்த சம்பவத்துக்கும், இந்த கதைக்கும் தொடர்பு இல்லை.

மக்கள் தங்கள் எண்ணங்களை எந்த பயமும் இல்லாமல் வெளிப்படுத்த உரிமை இருக்கிறது. எது உண்மை என்பதை ஒருவர் வெளிப்படுத்த முயலும்போது தாங்கள் மிரட்டப்படுவோம் என்று அவர்கள் பயப்படக்கூடாது. அதுபோன்ற சூழல் சமூகத்தில் ஆரோக்கியமற்ற விளைவுகளை ஏற்படுத்தும்’ என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg