Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடகொரியாவுக்கு எதிரான பொருளாதாரத்தடையை தற்காலிகமாகத் தளர்த்த ஏற்பாடு

In உலகம்
Updated: 11:24 GMT, Jan 9, 2018 | Published: 11:24 GMT, Jan 9, 2018 |
0 Comments
1244
This post was written by : Suganthini

குளிர்கால குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவுள்ள வடகொரியக் குழுவினருக்கு உதவும் வகையில், வடகொரியாவுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தடையைத் தற்காலிகமாகத்; தளர்த்த கவனஞ்செலுத்தி வருவதாக, தென்கொரிய வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

தென்கொரியாவின் தலைநகரான சியோலில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடவியலாளர்கள் சந்திப்பின்போதே, அவ்வமைச்சு இதனைக் கூறியுள்ளது.

இது தொடர்பாக அவ்வமைச்சு மேலும் தெரிவித்தபோது, ‘குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியக் குழுவினர் பங்கேற்க சம்மதித்துள்ளது. இந்நிலையில், வடகொரியக் குழுவினருக்கு நாம் உதவ வேண்டும். ஆகையால், வடகொரியாவுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தடையை தற்காலிகமாகத் தளர்த்த ஐ.நா. மற்றும் உரிய நாடுகளுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்கப்படும்’ எனத் தெரிவித்துள்ளது.

தென்கொரியாவில் எதிர்வரும் பெப்ரவரியில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா பங்கேற்பது தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடல், பன்முன்ஜொம் கிராமத்திலுள்ள சமாதான இல்லத்தில் வடகொரியா மற்றும் தென்கொரிய உயர்மட்டக் குழுவினர்களுக்கிடையில் இன்று நடைபெற்றபோது, ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வடகொரியா சம்மதித்தது.

இதனையடுத்து, வடகொரியாவுக்கு எதிராக விதிக்கப்பட்ட பொருளாதாரத்தடையைத் தற்காலிகமாகத் தளர்த்த தென்கொரியா எண்ணியுள்ளது.

இதற்கிடையில், வடகொரியாவின் ஏவுகணை மற்றும் அணுவாயுதச் சோதனைகளைத் தொடர்ந்து, வடகொரிய அதிகாரிகள் சிலரை தென்கொரியாவுக்குள் நுழைய தென்கொரியா ஏற்கெனவே தடைவிதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg