Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தேர்தலை புறக்கணிக்க மாற்றுத்திறனாளிகள் தீர்மானம்

In இலங்கை
Updated: 11:38 GMT, Jan 9, 2018 | Published: 11:37 GMT, Jan 9, 2018 |
0 Comments
1109
This post was written by : Risha

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலை புறக்கணிக்க தீர்மானித்துள்ளதாக விழிப்புலனற்ற வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கைகளை அரசாங்கம் கவனத்திற் கொள்ளவில்லை என தெரிவித்தே தேர்தலை புறக்கணிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து சங்கத்தின் தலைவர் கூறுகையில், ”நாட்டில் 17 லட்சம் மாற்றுத் திறனாளிகள் காணப்படுகின்றனர். இவ்வாறானவர்களின் கோரிக்கைகள் தொடர்ந்து அனைத்து அரசாங்கங்களினாலும் புறக்கணிக்கப்பட்டு வருகின்றன.

நாட்டில் சுமார் 70 பட்டதாரிகள் விழிப்புலனற்றவர்கள். மேலும், 30 பேர் விரைவில் தங்களது பட்டப்படிப்பை நிறைவுசெய்யவுள்ளனர். விழிப்புலனற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பை பெற்றுத் தரக்கோரி நாம் கடந்த 2013ஆம் ஆண்டு முதல் போராடி வருகின்றோம். ஆனால், அதிகாரத்தில் உள்ள எவரும் இதுவரை எமது கோரிக்கைகளை கண்டுக்கொள்ளவில்லை” என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg