Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மாங்குள விவசாயிகள் பாதிப்பு! – காலபோக அறுவடையில் சிக்கல்

In இலங்கை
Updated: 12:50 GMT, Jan 9, 2018 | Published: 12:50 GMT, Jan 9, 2018 |
0 Comments
1116
This post was written by : Puvanes

முல்லைத்தீவு – மாங்குளம் பகுதியில் நெல் உலர வைப்பதற்கான தளங்கள் இல்லாத காரணத்தினால் விவசாயிகள் பாரிய சிரமங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.

இதன்காரணமாக தற்போது காலபோக அறுவடை செய்யும் விவசாயிகள் தங்களது நெல்லை பதப்படுத்துவதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக குறித்த பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பாக மாங்குள விவசாயிகள் கருத்து தெரிவிக்கும் போது, தற்போது மாங்குளம் பகுதியில் அறுவடை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அறுவடை செய்கின்ற நெல்லை உலரவைப்பதற்கு போதிய தளங்கள் இன்மையால் மாங்குளம் வெள்ளாங்குளம் வீதியில் நெல்லை உலர விடுகின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வாறு வீதியில் நெல்லை உலர வைப்பதனால் போக்குவரத்துக்களுக்கும் பல்வேறு இடையூறுகள் காணப்படுகின்றன என அவர்கள்  சுட்டிக்காட்டியுள்ளதோடு, நெல் உலரவிடும் தளங்களை அமைத்துத்தருமாறும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg