Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

யாழ். நீர்வேலி விபத்தில் காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

In இலங்கை
Updated: 13:14 GMT, Jan 9, 2018 | Published: 13:14 GMT, Jan 9, 2018 |
0 Comments
1142
This post was written by : Risha

யாழ்ப்பாணம் நீர்வேலிப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்றுவந்த மற்றுமொரு நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன், இருவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்தனர். அவ்வாறு சிகிச்சைபெற்று வந்த இருவரில் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

முச்சக்கர வண்டியுடன் ஹயெஸ் வான் மோதி இந்த விபத்து சம்பவித்திருந்தது. இதன்போது முச்சக்கர வண்டியில் பயணித்த 5 வயதுச் சிறுமி ஸ்தலத்திலேயே உயிரிழந்ததுடன், சாரதி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

இதேவேளை, முச்சக்கர வண்டியில் பயணித்த இருவர் படுகாயங்களுடன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg