Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரவிக்கு அடுத்தடுத்து சோதனை: நீதிமன்றம் அழைப்பாணை

In இலங்கை
Updated: 03:11 GMT, Jan 10, 2018 | Published: 03:11 GMT, Jan 10, 2018 |
0 Comments
1181
This post was written by : Varshini

பிணை முறி விவகார சர்ச்சையில் சிக்கியுள்ள முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவை எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தினால் நேற்று (செவ்வாய்க்கிழமை) இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2001 மற்றும் 2002ஆம் ஆண்டு காலப்பகுதியில் சதொச நிறுவனத்தின் அரிசி இறக்குமதிக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 4 மல்லியன் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாக, சதொச நிறுவனத்தின் அப்போதைய தலைவர் விமல் பெரேராவுக்கு எதிராக லஞ்ச ஊழல் எதிர் ஆணைக்குழுவினால் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த காலப்பகுதியில் வர்த்தக துறை அமைச்சராக ரவி கருணாநாயக்க பதவி வகித்திருந்த நிலையில், இவ்வழக்கு தொடர்பான விசாரணைக்கு ரவி கருணாநாயக்கவுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg