Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மீண்டு வருவேன்: ஸ்டெயின் நம்பிக்கை

In கிாிக்கட்
Published: 06:33 GMT, Jan 10, 2018 |
0 Comments
1141
This post was written by : Anojkiyan
styn

காயத்திலிருந்து அடுத்த 6 வாரங்களில் மீண்டு வருவேன் என தென்னாபிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

கேப்டவுணில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில், பந்து வீசும் போது இடது குதிகாலில் தசை நார் கிழிந்ததால் அவர் டெஸ்ட் தொடரிலிருந்து விலகினார்.

இந்நிலையில் தனது காயம் குறித்து அவர் கூறுகையில், “காலில் காயம் ஏற்பட்டுள்ளதால் என்னால் ஊன்றுகோலைப் பயன்படுத்தாமல் நடக்க முடியவில்லை. நான் வலது கை பந்துவீச்சாளர் என்பதால், இடது காலை முன்வைத்தே பந்து வீச வேண்டும்.

இடது காலுக்கு அதிக அழுத்தம் தர வேண்டும் என்பதால், காயத்திலிருந்து பூரண குணம் அடையும் வரை போட்டிகளில் பங்கேற்க வேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறேன். அடுத்த 6 வாரங்களில் காயத்திலிருந்து மீண்டு வருவேன் என்று நம்புகிறேன்” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)