Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

போக்குவரத்துத்துறை ஊழியர்கள் வேலைநிறுத்தத்தை கைவிட வேண்டும்: முதல்வர்

In இந்தியா
Updated: 06:52 GMT, Jan 10, 2018 | Published: 06:52 GMT, Jan 10, 2018 |
0 Comments
1172
This post was written by : Elakkiya

போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை கைவிட்டு உடன் பணிக்கு திரும்ப வேண்டும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

ஊதிய உயர்வு மற்றும் ஓய்வூதிய நிலுவைத் தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 4 ஆம் திகதி முதல் அரச போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் இன்று (புதன்கிழமை) சட்டமன்றத்தில் முதலமைச்சர் மேற்படி அறிவுறுத்தியுள்ளார்.

சட்டப்பேரவை விதி எண் 110இன் கீழ் முதலமைச்சரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதன்போது, போக்குவரத்து ஓய்வூதியதாரர்களுக்கு 750 கோடி நிலுவைத் தொகை எதிர்வரும் பொங்கலுக்கு முன்னதாக வழங்கப்படும் என்றும் முதல்வர் உறுதியளித்துள்ளார். அத்துடன், 2011 ஆம் ஆண்டு முதல் டீசல் கொள்முதலுக்காக போக்குவரத்து கழகங்களுக்கு 2843 கோடி அரசு வழங்கியுள்ளதாகவும் ஓய்வுகால பணப்பலன்களாக 2147.39 கோடி வழங்கியுள்ளதாகலும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறிருக்க அரசு அறிவித்துள்ள ரூ.750 கோடி கருணைப் பணம் அல்ல என்றும்  அது போக்குவரத்து தொழிலாளர்களின் நிதி என்றும்  தமது கோரிக்கைகள் யாவும் முழுமையாக நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும் என்றும் தொழிற்சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg