Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உலகின் மிகப்பெரிய செல்வந்தராக ஜெவ் பெஸோஸ்

In உலகம்
Updated: 07:03 GMT, Jan 10, 2018 | Published: 07:03 GMT, Jan 10, 2018 |
0 Comments
1206
This post was written by : Suganthini

இணைய வர்த்தகத்தின் ஜாம்பவான்களான அமேஸன் நிறுவனம், ஒன்லைன் விற்பனையில் வராற்றில் முன்னெப்போதுமில்லாத வகையில் எல்லைகளைக் கடந்து விற்பனையை வியாபகப்படுத்திச் சென்றுகொண்டிருக்கும் நிலையில், அதன் ஸ்தாபகர் ஜெவ் பெஸோஸிற்கும் என்றுமில்லாத அளவில் செல்வந்தர் ஸ்தானத்தை வழங்கியுள்ளது.

அமெரிக்க நிதிச்சந்தைகள் அவற்றின் நாளாந்த கொடுக்கல், வாங்கல்களை முடிவிற்கு கொண்டுவந்தபோது, ஜெவ் பெஸோஸின் சொத்து மதிப்பு 104 பில்லியன் அமெரிக்க டொலர்கள். ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்பது இலங்கை ரூபாவின் பெறுமதியில் 15,000 கோடிகள் என்கின்றபோது, பெஸோஸின் சொத்து மதிப்பு இலங்கை ரூபாவில் 15 லட்சத்து 60 ஆயிரம் கோடிகள் என்றால் தலைசுற்றுகின்றதல்லவா!

போர்ப்ஸ் சஞ்சீகை உலகின் சொத்துக்களின் அளவை மதிப்பிடத்தொடங்கிய கடந்த 30 வருட காலத்தில் பணவீக்கத்தை தவிர்த்துப் பார்க்குமிடத்து இதுவரையில் மிகப்பெரிய பணக்காரராக ஜெவ் பெஸோஸே திகழ்கின்றார்.

கடந்த இரண்டு வருட காலத்தில் மாத்திரம் பெஸோஸின் சொத்துமதிப்பு 50 பில்லியன் அமெரிக்க டொலர்களால் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இது ஐஸ்லாந்து, பெலிஸ் அன்றேல் மொனோக்கோ போன்ற நாடுகளின் வருடாந்த மொத்த தேசிய உற்பத்தியின் அளவை விடவும் அதிகமாகும். 1999ஆம் ஆண்டில் அமேஸன் நிறுவனத்தைத் தொடங்கிய ஜெவ் பெஸோஸ் தனியொருவராக தனது அலுவலகத்தில் பணியாற்றுவதை இந்தப்படத்தில் காணலாம்.

இன்று அமேஸன் நிறுவனத்தில் மொத்தமாக 500,000 பேர் பணியாற்றவதாக தெரிவிக்கப்படுவதுடன், அதன் சந்தைப் பெறுமதி 571 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. உலகில் கடந்த பல வருடகாலமாக முதலிடத்தில் இருந்து தற்போது 2ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ள பில் கேட்ஸின் சொத்து மதிப்பு 92 பில்லியன் அமெரிக்க டொலர்கள் எனத் தற்போது மதிப்பிடப்பட்டுள்ளது.

தன்னுடையதும் மனைவியினதும் பெயரிலுள்ள பில் அன்ட் மெலின்டா கேட்ஸ் தொண்டு ஸ்தாபனத்திற்காக கடந்த காலத்தில் 36 பில்லியன் அமெரிக்க டொலர்களை கொடுத்திருக்காவிடின், இன்றும் பில்கேட்ஸே பணக்காரர் வரிசையில் முதலிடத்தில் இருந்திருப்பார்.

பில் அன்ட் மெலின்டா கேட்ஸ் மன்றமே இன்று உலகின் மிகப்பெரிய தொண்டு நிறுவனமாக விளங்;குவதுடன் எச்.ஐ.வி விழிப்புணர்வு உட்பட பல சமூகப் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைக் காண்பதற்கான நிதிகளை வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 30வருட வரலாற்றில் உண்மையிலேயே ஜெவ் பெஸோஸ் தற்போது கொண்டுள்ள சொத்துமதிப்புவை விடவும், 1999இல் பில்கேட்ஸின் சொத்து மதிப்பு அதிகமாக இருந்தது என உலகின் மிகப்பெரிய பணக்காரர் தொடர்பான கணிப்பை மேற்கொள்ளும் ஒருதரப்பினர் வாதிடுகின்றனர்.

1999ஆம் ஆண்டில் மைக்ரோ சொப்ட் நிறுவனத்தின் பங்குகள் அதற்கு முன்பு இல்லாத உச்சத்தை தொட்டபோது பில்கேட்ஸின் ஒட்டுமொத்த சொத்துமதிப்பு முதன்முறையாக 100பில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டியது. தற்போதைய பணவீக்கத்தின் அடிப்படையில் அந்த சொத்துக்களின் மதிப்பை பார்த்தால், பில் கேட்ஸின் சொத்து மதிப்பு 150 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் இருக்கும் எனக் கூறப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg