Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சட்டமன்ற உறுப்பினர்களுக்கான ஊதிய உயர்வுக்கு தி.மு.க. எதிர்ப்பு

In இந்தியா
Published: 07:14 GMT, Jan 10, 2018 |
0 Comments
1104
This post was written by : Elakkiya
stalin

சட்டமன்ற உறுப்பினர்களுக்கான ஊதிய உயர்வுக்கு தி.மு.க. தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சட்டமன்ற உறுப்பினர்களின் ஊதிய உயர்வு சட்டமூலம் இன்று (புதன்கிழமை) தமிழக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்திருந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்த தி.மு.க. தரப்பினர் சட்டமன்றிலிருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.

போக்குவரத்து ஊழியர்கள் ஊதிய உயர்வை வலியுறுத்தி போராட்டம் நடத்திவரும் இத்தருணத்தில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கும் சட்டமூலம் நிறைவேற்றப்படுவதானது கேலிக்குரியது என்று தி.மு.க. சார்பில் கட்சியின் செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அதேவேளை டி.டி.வி. தினகரன் தரப்பினரும் குறித்த சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சட்டமன்ற உறுப்பினர்களின் ஊதியம் அதிகரிக்கப்படும் என கடந்த ஆண்டு ஜுலை மாதம் நடைபெற்ற கூட்டத்தொடரில் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்திருந்த நிலையில் இன்று சட்டமூலம் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த சட்டமூலம் நிறைவேற்றப்படின் தற்போது 55 ஆயிரமாக உள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் ஊதியம் ஒரு லட்சத்து 5 ஆயிரம் வரை அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் 20 ஆயிரம் ரூபாய்வரை ஓய்வூதியம் பெறுவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)