உளநல சுகாதாரக் கற்கையை அறிமுகப்படுத்த பொலிஸார் வலியுறுத்து

வேல்ஸிலுள்ள பாடசாலைகளில் உளநல சுகாதாரக் கற்கைநெறியை அறிமுகப்படுத்த வேண்டுமென்று, பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.
கடந்த 2016ஆம் ஆண்டு தெற்கு வேல்ஸில் உளநல பாதிப்புக்குள்ளான 48 சிறுவர்கள் மற்றும் இளைஞர், யுவதிகள் உளநல சுகாதாரச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அண்மைய வருடங்களாக உளநலத் தாக்கத்துக்கு உள்ளாகுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
பாடசாலைகளில் நடத்தப்படும் சோதனைகளின்போது, சிறுவர்கள் உளநலத் தாக்கத்துக்கு உள்ளாகின்றனர். அதேவேளை இளைஞர், யுவதிகள் சமூக ஊடகங்களால் தாக்கப்படுவதால், உளநலப் பிரச்சினையை எதிர்கொள்வதாகவும், பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்நிலையில், பாடசாலைகளில் சிறுவர்களுக்கு உளநல சுகாதாரக் கற்கைநெறியைப் புகட்ட வேண்டிய அவசியம் காணப்படுவதாகவும், பொலிஸார் கூறியுள்ளனர்.