Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிம்பாவே முதற்பெண்மணி கிரேஸின் கலாநிதி பட்டம் தொடர்பாக விசாரணை

In
Updated: 09:46 GMT, Jan 10, 2018 | Published: 09:46 GMT, Jan 10, 2018 |
0 Comments
1246
This post was written by : Suganthini

சிம்பாவேயின் முன்னாள் முதற்பெண்மணி கிரேஸ் முகாபேக்கு வழங்கப்பட்டிருந்த கலாநிதிப் பட்டம் தொடர்பாக, அந்நாட்டின் ஊழலுக்கு எதிரான குழுவினர் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

முன்னாள் முதற்பெண்மணி கிரேஸ் மோசடியான முறையில் கலாநிதிப் பட்;டத்தை பெற்றுக்கொண்டாரா என்பது தொடர்பாக விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, ஊழலுக்கு எதிரான குழுவினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2014ஆம் ஆண்டு, சிம்பாவே பல்கலைக்கழகத்தில் கிரேஸ் முகாபே இணைந்து, சில மாதங்களில் கலாநிதிப் பட்டத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.

இந்நிலையில், இவருக்கு வழங்கப்பட்டிருந்த கலாநிதிப் பட்டம் தொடர்பாக விசாரணை செய்யக் கோரி, சிம்பாவே பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்கள் கடந்த வாரம் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இதனையடுத்து, மேற்படி விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அக்குழுவினர் கூறியுள்ளனர்.

இதேவேளை, சிம்பாவேயில் 37 வருடங்களாக ஆட்சியிலிருந்த முன்னாள் ஜனாதிபதி றொபர்ட் முகாபே, தனது மனைவி கிரேஸை துணை ஜனாதிபதியாக்கும் நோக்கில், ஏற்கெனவே துணை ஜனாதிபதியாக இருந்த எம்மெர்சன் மனங்காகுவை பதவியிலிருந்து நீக்கியிருந்தார். இதனையடுத்து, கடந்த நொவம்பரில் அந்நாட்டில் ராணுவ நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட நிலையில், முகாபேயும் தனது பதவியை ராஜினாமாச் செய்திருந்தார்.

இதனையடுத்து, சிம்பாவேயின் புதிய ஜனாதிபதியாக எம்மெர்சன் மனங்காகுவா பதவியேற்றிருந்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg