Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஊடகவியலாளர்களுக்கான பயிற்சிப்பட்டறை!

In இலங்கை
Updated: 10:43 GMT, Jan 10, 2018 | Published: 10:43 GMT, Jan 10, 2018 |
0 Comments
1172
This post was written by : Ravivarman

தேர்தல் காலத்தில் அறிக்கையிடலின் அடிப்படைகள் சம்பந்தமாக இலங்கை ஊடகவியலாளர்களுக்கு தெளிவூட்டும் இரு நாள் பயிற்சிப்பட்டறை இடம்பெற்றுள்ளது.

மேற்படி பயிற்சிப்பட்டறை நேற்று (செவ்வாய்க்கிழமை) நீர்கொழும்பு ஜெற்விங்க் விடுதியில் இடம்பெற்றது.

இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களில் அறிக்கையிடும் தெரிவு செய்யப்பட்ட சுமார் 35 சிங்கள தமிழ் மற்றும் முஸ்லிம் ஊடகவியலாளர்கள் இச்செயலமர்வில் பங்கு பற்றியதாக ஐபெஸ் நிறுவனத்தின் இணைப்பாளர் அஹமட் றிப்கான் தெரிவித்தார்.

இந்த இரு நாள் செயலமர்வில் உள்ளுர் தேர்தலிற்கான தேர்தல் முறைமைகளைப் புரிந்து கொள்ளுதல், ஊடகத்தின் வகிபாகம், அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள், நடத்தை ஒழுக்கம் மற்றும் ஊடக தர நிலைகள், பெண்களும் ஊடகமும் உள்ளிட்ட பல்வேறு விடயதானங்கள் தெளிவுபடுபடுத்தப்பட்டன.

யூஎஸ்எயிட் நிறுவனத்தின் அனுசரணையுடன் தேர்தல் முறைமைகளுக்கான சர்வதேச மன்றத்தினால் (International Foundation for Electoral System) ஒழுங்கு செய்யப்பட்ட இந்நிகழ்வில் ஐபெஸ் (IFES) நிறுவனத்தின் ஆசிய பசிபிக் பிராந்தியங்களுக்கான தேர்தல் பாதுகாப்பு நிபுணத்துவப் பிரிவுப் பணிப்பாளர் வாசு மோகன் (Regional Director Asia – Pacific and Election Security Specialist), ஊடகப் பயிற்சி நிபுணர் ஜீன் மக்கென்ஸி (Senior Media Training Specialist – Jean Mackenzie), சிரேஷ்ட குழுத் தலைவி பீவெர்லி ஹஜர்டோன் (Senior Chief of Party – Beverly  ) ஆகியோருட்பட பல துறைசார்ந்த நிபுணர்கள் பயிற்சிகளை வழங்கினர்.

2 1

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg