Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சர்வதேசத்தில் கூட்டமைப்பின் பலத்தை நிரூபிக்க வேண்டும்: கவீந்திரன் கோடீஸ்வரன்

In இலங்கை
Updated: 11:31 GMT, Jan 11, 2018 | Published: 02:53 GMT, Jan 11, 2018 |
0 Comments
1309
This post was written by : Elakkiya

உள்ளுராட்சிசபை தேர்தல் மூலம் தேசியத்தில் மாத்திரமின்றி சர்வதேசத்திலும் எமது பலத்தினை நிரூபிக்க வேண்டிய கடப்பாடு ஒவ்வொருவருக்கும் இருப்பதாக அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கல்முனை மாநகரசபைத் தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சிவலிங்கத்தின் கல்முனை 12ஆம் வட்டாரத்திற்கான தேர்தல் அலுவலகத்தைத் திறந்துவைக்கும் நிகழ்வு நேற்று (புதன்கிழமை) மாலை நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “வடக்கு கிழக்கிலுள்ள மக்கள் அன்றிலிருந்து இன்று வரைக்கும் தமிழ்த்தேசியத்தின் மீது பற்றுறிதி கொண்டவர்களாகவும் அக்கறை கொண்டவர்களாகவும் செயற்படுகின்றனர். எனவே இம்முறை உள்ளூராட்சித் தேர்தலில் தேசிய ரீதியில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பலத்தினை நிரூபிக்கும் அதேவேளை தேர்தலின் பெறுபேறுகளை எதிர்பார்த்துள்ள புலம்பெயர்ந்து வாழும் மக்களின் எதிர்பார்ப்பை வீணடிக்காத வகையிலே செயற்படவேண்டும்.

இந்த விடயத்தினை கருத்தில் கொண்டும் கல்முனை மாநகரத்தின் இன்றைய நிலையினை கவனத்தில் கொண்டும் கடந்த காலங்களில் தமிழ் மக்களுக்கு எவ்வாறான நிலை உருவாகியது என்பதனை சிந்தித்தும் செயற்படவேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது.

எனவே கல்முனையில் உள்ள அனைத்து தமிழ் மக்களும் கட்சிபேதங்களை மறந்து கல்முனை, தமிழர்களின் இதயபூமி என்பதை கருத்தில் கொண்டு கூட்டமைப்பின் பலத்தினை முன்னநகர்த்த உணர்வுபூர்வமாக செயற்படவேண்டும்” என கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்நிகழ்விற்கு கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் மு.இராஜேஸ்வரன், ரெலோவின் உப தலைவர் கென்றி மகேந்திரன், கல்முனை மாநகரசபையில் போட்டியிடும் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்கள் பட்டியலில் இடம்பெறும் உறுப்பினர்கள் மற்றும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் முக்கிய உறுப்பினர்கள், விளையாட்டுக்கழகங்களின் உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

vlcsnap-2018-01-10-23h47m59s470 F6DAD4EB-1391-4AAC-9C92-D37071BFCD80 30CABAC1-B81C-426C-9801-642A58E92774

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg