Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மண்டூர்-கல்முனை பிரதான வீதியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு

In இலங்கை
Updated: 07:14 GMT, Jan 11, 2018 | Published: 06:25 GMT, Jan 11, 2018 |
0 Comments
1526
This post was written by : Elakkiya

அம்பாறை மாவட்டம் மண்டூர்-கல்முனை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் கல்முனை மதுவரி திணைக்கள உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, ஒருவர் காயமடைந்துள்ளார்.

மண்டூர்-கல்முனை பிரதான வீதி வேப்பையடி எனும் இடத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தில் ஏறாவூரைச் சேர்ந்த கிருஸ்ணபிள்ளை வாசன் (வயது-33) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். காயமடைந்தவர் களுவாஞ்சிக்குடி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சவளக்கடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg