Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அரசாங்க விரோத செயற்பாட்டில் ஈடுபட்ட 237 பேர் துனீசியாவில் கைது

In
Updated: 06:26 GMT, Jan 11, 2018 | Published: 06:26 GMT, Jan 11, 2018 |
0 Comments
1268
This post was written by : Risha

துனீசியாவில் பொலிஸ் நிலையங்கள் மற்றும் அரச கட்டடங்களை சேதப்படுத்தி அரசாங்க விரோத செயற்பாடுகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 237 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது சம்பவத்தை உள்துறை அமைச்சு நேற்று (புதன்கிழமை) உறுதிபடுத்தியுள்ளது.

அதிகரித்துவரும் அரச கடன் சுமையை குறைத்தல் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை திருப்திபடுத்துதல் ஆகிய காரணங்களுக்காக, கடந்த முதலாம் திகதி முதல் புதிய வரி விதிப்புகளும் விலை அதிகரிப்புகளும் அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடளாவிய ரீதியில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் நேற்று முன்தினம் துனீசியாவில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் யூத பாடசாலையொன்றும் சேதமாக்கப்பட்டது.

இதேவேளை, கடந்த திங்கட்கிழமை துனீசிய தலைநகர் துனிஸ் மற்றும் தெபூர்பா ஆகிய நகர்களில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் கண்ணீர்ப் புகை தாக்குதல் நடத்தியிருந்தனர். இதன்போது ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg