Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

துரோகம் செய்யக்கூடாது என்பதாலேயே அணித்தலைவர் பொறுப்பை ஏற்றேன்: மெத்தியூஸ்

In கிாிக்கட்
Updated: 07:01 GMT, Jan 11, 2018 | Published: 06:59 GMT, Jan 11, 2018 |
0 Comments
1588
icon_com
This post was written by : Anojkiyan
mathews-getty2904-6301

இக்கட்டான நிலையில் இருக்கும் இலங்கை அணியை மீண்டும் பொறுப்பேக்க கிடைத்த வாய்ப்பை, உதறித் தள்ளினால், துரோகம் ஆகிவிடுமோ என்ற காரணத்தாலேயே அணித்தலைவர் பதவியை மீண்டும் ஏற்றேன் என அஞ்சலோ மெத்தியூஸ் தெரிவித்துள்ளார்.

மீண்டும் அணித்தலைவர் பதவியை ஏற்றது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“மீண்டும் தலைவர் பதவியை பெற்றுக்கொள்ளும் நோக்கத்தோடு நான் அன்று பதவியை துறக்கவில்லை. இளம் வீரர் ஒருவருக்கு அணியைக் கட்டியெழுப்புவதற்கு வாய்ப்பு கொடுத்துவிட்டு விலகுவதுதான் சரியென்று அன்று நான் நினைத்தேன்.

ஆனால் பயிற்சியாளரும், இலங்கைக் கிரிக்கெட் நிர்வாகமும் கேட்டுக்கொண்டதற்கிணங்க மீண்டும் தலைவர் பொறுப்பை இப்போது ஏற்றுள்ளேன். நான் கடந்த பத்து வருடங்களாக விளையாடுகின்றேன். இந்த கிரிக்கெட் எனக்கு நிறைய தந்திருக்கிறது.

இக்கட்டான இந்த நிலையில் நான் இலங்கை கிரிக்கெட்டுக்கு சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை உதறித் தள்ளினால் துரோகம் செய்தவனாகிவிடுவேன். அதனால்தான் தலைவர் பொறுப்பை மீண்டும் ஏற்றேன்” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)