Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரோஹித் மற்றும் தவானை வெண்ணெய்-சுண்ணாம்புடன் ஒப்பிட்ட கங்குலி

In கிாிக்கட்
Updated: 10:20 GMT, Jan 11, 2018 | Published: 10:09 GMT, Jan 11, 2018 |
0 Comments
1917
This post was written by : Anojkiyan

ரோஹித் சர்மா மற்றும் ஷிகார் தவானின் உள்நாட்டு, அயல்நாட்டு துடுப்பாட்ட வராலாறு வெண்ணெய்க்கும் சுண்ணாம்புக்கும் உள்ள வித்தியாசம் என இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

தென்னாபிரிக்க அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில், ரோஹித் சர்மா மற்றும் ஹிகார் தவான் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளமை குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், அதுகுறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், “இந்திய அணியானது விராட் கோஹ்லி மற்றும் முரளி விஜய்யையே நம்பியுள்ளது. புஜாராவை எடுத்துக் கொண்டால், அவரது 14 சதங்களில் 13 சதங்கள் துணைக்கண்டங்களில் எடுக்கப்பட்டன. நான் ஏன் ராகுலை அடிக்கடி குறிப்பிடுகிறேன் என்றால் அவர் அவுஸ்ரேலியாவில் சதம் எடுத்துள்ளார், மே.இ.தீவுகள் மற்றும் இலங்கையிலும் ஓட்டங்கள் எடுத்துள்ளார். தோல்வி எனக்கு அதிர்ச்சியாக இல்லை. இதற்காக நாம் பதற்றமடைய வேண்டிய தேவையுமில்லை. எனக்கு விராட் கோஹ்லி மீது அதிக மரியாதையும் நம்பிக்கையும் உள்ளது. அடுத்த போட்டியில் மேம்பட்ட துடுப்பாட்டத்தை இந்திய வீரர்கள் வெளிப்படுத்துவார்கள்.

ரவிசாஸ்திரியும், விராட் கோஹ்லியும் அணியை உடனே மாற்றிவிட மாட்டார்கள் என்றே நினைக்கிறேன். ரஹானே அல்லது ராகுல் இருவரில் ஒருவர்தான் அணிக்குள் வருவார். துடுப்பாட்டத்தில் இந்திய அணி கடுமையாக போராட வேண்டும். சென்சூரியன் ஆடுகளமும் வேகமானதே. கேப்டவுனைக் காட்டிலும் அதிக பவுன்ஸ் இருக்கும்.

நான் பரிந்துரை செய்வதென்றால் ஷிகர் தவானுக்குப் பதில் ராகுல் மற்றும் 5 பந்துவீச்சாளர்களைக் களமிறக்குவேன். ரோஹித் ஷர்மாவுக்கு இன்னொரு வாய்ப்பு கொடுத்துப் பார்க்கலாம். துடுப்பாட்டத்தில் ஒரு அரைச்சதம் கூட இல்லை. இவற்றையெல்லாம் பின் தள்ளி அடுத்த டெஸ்ட் போட்டியில் வலுவாக வர வேண்டும். தோல்வி மீது பெரிய விமர்சனங்கள் எதுவும் வரவில்லை, எனவே அடுத்த டெஸ்ட் போட்டியில் எக்காரணத்தை முன்னிட்டும் இன்னும் சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியாக வேண்டும்” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg