Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு பிராந்திய அலுவலகம் இடமாற்றம்

In இலங்கை
Updated: 10:42 GMT, Jan 11, 2018 | Published: 10:40 GMT, Jan 11, 2018 |
0 Comments
1107
This post was written by : Elakkiya

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய அலுவலகம் இன்று (வியாழக்கிழமை) முதல் புதிய இடத்தில் இயங்கவுள்ளதாக அமைப்பின் இணைப்பாளர் ஏ.சி. அப்துல் அஸீஸ் தெரிவித்துள்ளார்.

அதன்படி இதுவரை காலமும் மட்டக்களப்பு சின்ன உப்போடை பகுதியில் இயங்கிவந்த மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு பிராந்திய அலுவலகம் தற்போது மட்டக்களப்பு கோவிந்தன் வீதியை அண்மித்த பகுதிக்கு இடம்மாற்றப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் ஆணைக்குழுவை நாடி வரும் மக்களின் போக்குவரத்து உள்ளிட்ட வசதிகளை கருத்தில் கொண்டு நகர மத்தியில் அலுவலகத்தை இடம்மாற்றும் தீர்மானத்தை மேற்கொண்டதாக அமைப்பின் இணைப்பாளர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு பிரதான பேரூந்து நிலையம், போதனா வைத்தியசாலை, சிறைச்சாலை, தலைமையக வங்கிகள், பாடசாலைகள் உள்ளிட்டவற்றிற்கான போக்குவரத்துக்கள் இந்த பாதையூடாகவே இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg