Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்தியன் சூப்பர் லீக்: டெல்லி அணியை துவம்சம் செய்தது கேரளா அணி

In உதைப்பந்தாட்டம்
Updated: 10:59 GMT, Jan 11, 2018 | Published: 10:59 GMT, Jan 11, 2018 |
0 Comments
1121
This post was written by : Anojkiyan

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில், 43வது லீக் போட்டியில், கேரளா பிளாஸ்டர்ஸ் அணி, 3-1 என்ற கோல் கணக்கில் டெல்லி டைனமோசை வீழ்த்தியது.

நேற்று (புதன்கிழமை) டெல்லி நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இப்போட்டியில், ஆரம்பம் முதலே கோல் போட இரு அணிகளும் கடுமையாக போராடின.
ஆனால் முதல் கோல் போடும் வாய்ப்பு கேரளா அணிக்கு கிட்டியது. 12வது நிமிடத்தில் கேரள வீரர்

பெகுசன் கடத்தி கொடுத்த பந்தை அந்த அணியின் நட்சத்திர வீரர் இயான் ஹூமே கோலாக்கினார். இதன் பின் கடுமையாக போராடிய டெல்லி அணி, 44வது நிமிடத்தில் கிடைத்த ‘பிரிகிக்’ வாய்ப்பில் கோல் அடித்தது. டெல்லி வீரர் ரோமியோ பெர்னாண்டஸ், உதைத்த பந்தை அணித்தலைவர் பிரிதம் கோட்டல் தலையால் முட்டி கோலாக்கி போட்டியை சமனுக்கு கொண்டு வந்தார்.

இதனால் வெற்றி கோல் போட இரு அணிகளும் கடுமையாக போராடின. 78வது நிமிடத்தில் கேரளா அணி வீரர் இயான் ஹூமே, தனி ஆளாக சென்று அட்டகாசமாக கோல் அடித்தார். 83வது நிமிடத்தில் அவர் மேலும் ஒரு கோலை அடித்தார்.

முடிவில் இயான் ஹூமேவின் ‘ஹெட்ரிக்’ கோலின் உதவியுடன் கேரளா அணி, 3-1 என்ற கோல் கணக்கில் டெல்லி டைனமோசை வீழ்த்தி இரண்டாவது வெற்றியை பதிவுசெய்தது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg