Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தேர்தல் விதிமீறல் – கடந்த காலத்தை விட குறைவென பஃவ்ரல் தெரிவிப்பு

In இலங்கை
Updated: 13:25 GMT, Jan 11, 2018 | Published: 13:25 GMT, Jan 11, 2018 |
0 Comments
1174
This post was written by : Varshini

கடந்த தேர்தல் காலங்களை விட இம்முறை, தேர்தல் விதிமீறல் சம்பவங்கள் மிகவும் குறைவடைந்துள்ளதாக பஃவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்விடயத்தைக் குறிப்பிட்டார்.

வேட்பு மனு தாக்கல் செய்ய ஆரம்பித்த நாள் முதல் இதுவரை 243 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக குறிப்பிட்ட அவர், அவற்றில் தாக்குதல்கள் தொடர்பில் 37 சம்பவங்கள் பதிவாகியிருந்த போதும் அவை பாரதூரமானதல்ல எனக் குறிப்பிட்டார். நான்கு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், அரச சொத்துக்கள் மற்றும் பணியாளர்களை தேர்தல் நடவடிக்கைக்கு பயன்படுத்தியமை, இடமாற்றங்கள் என்பன தொடர்பில் 29 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதாக ரோஹண ஹெட்டியாராச்சி குறிப்பிட்டார்.

சட்டவிரோத தேர்தல் பிரசாரம் மற்றும் அரசியல் நோக்கம் கருதி அரச செயற்பாடுகளை முன்னெடுத்தமை ஆகியவை தொடர்பாகவே அதிக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதாகவும் குறிப்பிட்டார்.

குறிப்பாக, தேர்தல் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் முழுமூச்சுடன் செயற்படுவதாக குறிப்பிட்ட ரோஹண ஹெட்டியராச்சி, சில விடயங்களில் தேர்தல் சட்டதிட்டங்கள் கடுமையாக அமுல்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். இதனையிட்டு நாட்டு மக்கள் பெருமைப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

கடந்த காலங்களில் காணப்பட்ட பதாதைகள் மற்றும் சுவரொட்டிகளை தற்போது காண முடியவில்லை என்றும் சுட்டிக்காட்டினார். எனினும், கிராமப் புறங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்படுவது குறித்து தொடர்ந்தும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று வருவதாகவும் ரோஹண ஹெட்டியாராச்சி குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg