Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிணைமுறி அறிக்கை மத்திய வங்கி ஆளுநருக்கு அனுப்பிவைப்பு

In இலங்கை
Updated: 07:00 GMT, Jan 12, 2018 | Published: 02:54 GMT, Jan 12, 2018 |
0 Comments
1141
This post was written by : Risha

மத்திய வங்கியின் பிணைமுறி விநியோகம் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதி செயலாளரினால் மத்திய வங்கியின் ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆராயும் வகையில் நேற்று (வியாழக்கிழமை) குறித்த அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதியின் ஆலோசனையின் பின்னர் மத்திய வங்கியின் நிதிச்சபை 10 பக்கங்களைக் கொண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

முறிகள் கொடுக்கல் வாங்கல் மோசடி போன்ற முறைகேடுகள் எதிர்காலத்தில் இடம்பெறாமல் இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் தொடர்பில் நிதிச்சபை அதில் தெளிவுபடுத்தியுள்ளது.

இந்நிலையிலேயே பிணைமுறி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை இலங்கை மத்திய வங்கி ஆளுநரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் முதலீட்டுத் தீர்மானங்களை மேற்கொள்ளும் போது நம்பகத்தன்மை மற்றும் நிர்வாகம் என்பனவற்றை தொடர்ந்தும் மேம்படுத்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg