Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இரணைமடுச் சந்தியில் பாரவூர்தி விபத்து: சாரதி உயிரிழப்பு!

In இலங்கை
Published: 03:47 GMT, Jan 12, 2018 |
0 Comments
1156
This post was written by : Ravivarman

கிளிநொச்சி, இரணைமடுச் சந்தியில் 2 ரிப்பர் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று விபத்துக்குள்ளானதில் சாரதி உயிரிழந்துள்ளார்.

மாங்குளம் பகுதியிலிருந்து இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை யாழ் நோக்கிப் பயணித்தபோதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்துச் சம்பவம் கிளிநொச்சி – முல்லைத்தீவு பிரதிப் பொலிஸ்மா அதிபர் காரியாலயத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.

முன்னே சென்ற ரிப்பர் வாகனம் சடுதியாக நிறுத்தியமையால் பின்னால் மணல் ஏற்றிச் சென்ற மற்றய ரிப்பர் பின்னால் மோதியுள்ளது. இதன்போதே பின்னால் வாகனத்தைச் செலுத்திய சாரதி சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

குறித்த சாரதியின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பாக கிளிநொச்சிப் பொலிஸார் விசாரணை முன்னெடுத்து வருகின்றனர்.

20180112_063130 20180112_063041

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)