Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சீன- பிரித்தானிய உறவை ஆழப்படுத்துவது குறித்து பேச்சு

In
Updated: 04:30 GMT, Jan 12, 2018 | Published: 04:30 GMT, Jan 12, 2018 |
0 Comments
1183
This post was written by : Risha

சீன- பிரித்தானிய உறவை வலுப்படுத்துவது தொடர்பாக சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கிற்கும், பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டேவிட் கமரூனும் கலந்துரையாடியுள்ளனர்.

இருநாட்டு தலைவர்களுக்கும் இடையிலான குறித்த சந்திப்பு நேற்று (வியாழக்கிழமை) பீஜிங்கில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது கருத்து தெரிவித்த சீனா ஜனாதிபதி, ”சீனாவிற்கும் பிரித்தானியாவிற்கும் இடையே பரஸ்பர ஒத்துழைப்புகள் ஆழமாகியுள்ளதுடன், கலாசாரம் மற்றும் கல்வியில் செயற்திறனான பரிமாற்றங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இது இருநாட்டு மக்களுக்கும் நன்மையளிப்பதாக அமையும்.

இதேவேளை, இருதரப்பு உறவுகளின் நீண்டகால நிலையான வளர்ச்சியை முன்னெடுத்துச்செல்ல இருதரப்பிற்கும் இடையே மேலும் கூடுதலான உறுதியான முடிவுகளை எடுக்க வேண்டும்” என்றார்.

இந்நிலையில், இருதரப்பு பரிமாற்றங்கள் மற்றும் ஒத்துழைப்புகளை முன்னெடுத்து செல்வதற்கு சாதகமான பங்கு வகிப்பதற்கு பிரித்தானியா தொடர்ந்து தயாராக உள்ளதாக டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg