ஜனாதிபதியின் பதவிக்காலம் ஐந்து வருடங்கள்: மாற்றுக் கொள்கைகளுக்கான ஆய்வு நிலையம்!

ஜனாதிபதி மைத்திரிபாலவ சிரிசேன தன்னுடைய முன்னைய உறுதிமொழிகளை நினைவில் வைத்திருக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் தற்போதைய பதவிக் காலம் 5 வருடங்க் மாத்திரமே என்றும் மாற்றுக் கொள்கைகளுக்கான ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பில் ஏற்பட்டுள்ள குழப்பம் தொடர்பில் மாற்றுக் கொள்கைக்கான ஆய்வு நிலையம் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
“அரசியலமைப்பிற்கான பத்தொன்பதாவது திருத்தமானது இத்திருத்தத்தின் எவ்வாறான ஏற்பாடுகள் தற்போது ஜனாதிபதியாக பதவி வகிக்கின்ற ஜனாதிபதி சிறிசேனவிற்கு ஏற்பாகாது என்பதை தெளிவாக கூறுவதுடன் என்பதுடன் பதவிக்காலத்தின் குறைப்பானது அத்தகைய ஒரு ஏற்பாடல்ல என்பதையும் தெளிவுபடுத்தியிருக்கின்றது.
மேலும், பத்தொன்பதாவது திருத்தத்தின் உருவாக்கத்திற்கான வழிநடத்துகையின்போது, பத்தொன்பதாவது திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஜனாதிபதியின் பதவிக் காலம் குறைப்பு தொடர்பிலான விடயம் தனக்கும் பொருந்தும் என்ற கருத்தை வெளிப்படுத்தினார் என்பதை சுட்டிக் காட்டியுள்ள மாற்றுக் கொள்கைக்கான ஆய்வு நிலையம், அதனை ஜனாதிபதி மறந்திருக்க மாட்டார் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
ஆக, அரசியலமைப்பின் 19ஆவது சீர்திருத்தச் சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்கள் எனத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. எனவே இது குறித்து குழப்பமடையத் தேவையில்லை. எனினும் நேற்று சட்டமா அதிபர் பிரியந்த டெப் 6 வருடங்கள் வரை நீடிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்தும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது“ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.