அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: மீண்டும் களத்தில் ஜோகோவிச்!

முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த 6 மாதமாக போட்டியில் பங்கேற்காமல் இருந்த ஜோகோவிச் அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் போட்டியில் பங்கேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் எதிர்வரும் 15ஆம் திகதி ஆரம்பமாகின்றது.
ஏற்கனவே அன்டி முர்ரே (இங்கிலாந்து), நிஷிகோரி (ஜப்பான்) ஆகியோர் காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகிய நிலையில் ஜோகோவிச் மீண்டும் களம் திரும்ப இருப்பது போட்டி அமைப்பாளர்களுக்கு மகிழ்ச்சி அளித்து இருக்கிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சம்பியன் செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) ஆடாத நிலையில் முன்னாள் முதனிலை வீராங்கனையான விக்டோரியா அஸரென்கா (பெலாரஸ்) குடும்ப பிரச்சினை காரணமாக போட்டியில் இருந்து விலகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.