Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மஹியங்கனை பகுதியில் பாரிய ஆர்ப்பாட்டம்!

In இலங்கை
Updated: 09:30 GMT, Jan 12, 2018 | Published: 09:30 GMT, Jan 12, 2018 |
0 Comments
1074
This post was written by : Anojkiyan

வீதியை புனரமைத்துத் தரக்கோரி மஹியங்கனை பம்பறவான கிராம மக்கள், பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

மஹியங்கனை – கதுருவெல பிரதான வீதி சதுன்புர பிரதேச பகுதியில் நேற்று (வியாழக்கிழமை) குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சதுன்புர தொடக்கம் பம்பறவான வரையிலான வீதி, பல வருடங்களாக மோசமான நிலைமையில் உள்ள நிலையில், அதனை புனரமைத்துத் தருமாறு கோரியே குறித்த மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரதிநிதிகள் தமக்கான பணிகளைச் செய்யத் தவறியுள்ளதாக குற்றஞ்சாட்டும் அப்பகுதி மக்கள், உடனடியான தீர்வை பெற்றுதருமாறுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனைதொடர்ந்து, பொலிஸார், மக்கள் பிரதிநிதிகளுடன் குறித்த வீதியைப் புனரமைப்பது தொடர்பாக கலந்துரையாடிய பின்னர் இவ்ஆர்ப்பாட்டம் நிறைவுக்கு வந்தது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg