Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

போலி ஆவணம் தாக்கல்: நடிகர் தனுசுக்கு நோட்டீஸ்!

In சினிமா
Updated: 10:04 GMT, Jan 12, 2018 | Published: 10:04 GMT, Jan 12, 2018 |
0 Comments
1349
This post was written by : Ravivarman

மதுரை உயர்நீதிமன்றத்தில் போலி ஆவணம் தாக்கல் செய்ததாக நடிகர் தனுசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக கதிரேசன் தரப்பின் சட்டத்தரணி இன்று (வெள்ளிக்கிழமை) தகவல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,’மதுரை மாவட்டம், மேலூர் பகுதியைச் சேர்ந்தவர் கதிரேசன். இவரது மனைவி மீனாட்சி. இவர்கள் நடிகர் தனுஷ் தங்கள் மகன் என்றும், வயது முதிர்வு காரணமாக தங்களுக்கு பராமரிப்புத் தொகை வழங்க தனுசுக்கு உத்தரவிடக் கோரியும் மேலூர் நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கை இரத்து செய்யக்கோரி தனுஷ் தரப்பில் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றம், மேலூர் நீதிமன்றில் கதிரேசன் – மீனாட்சி தம்பதியினர் தொடர்ந்த வழக்கை இரத்து செய்து உத்தரவிட்டது.

இந்நிலையிலேயே மதுரை உயர்நீதிமன்றத்தில் போலி ஆவணம் தாக்கல் செய்ததாக தனுஷ் தரப்பு மீது வழக்கு தொடரப்போவதாக கதிரேசன் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg