Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரஜினி – கமல் அரசியல் குறித்து சூர்யாவின் விளக்கம்!

In சினிமா
Updated: 10:22 GMT, Jan 12, 2018 | Published: 10:22 GMT, Jan 12, 2018 |
0 Comments
1097
This post was written by : Ravivarman

நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரின் அரசியல் பிரவேசம் குறித்து ‘தானா சேர்ந்த கூட்டம்’ புரமோஷனில் பங்கேற்ற போது நடிகர் சூர்யா விளக்கம் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் கொச்சியில் நடந்த நிகழ்ச்சியில் சூர்யா பங்கேற்றபோதே ஊடகவியலாளர்களின் கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே இது தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவிக்கையில்,

‘தமிழ் திரையுலகைச் சேர்ந்த முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் அரசியலில் குதித்துள்ளனர் என்றால் அது அவர்களது அரசியல் ஆர்வத்தினால் மட்டும் அல்ல. சரியான தெளிவான புரிதலோடுதான் அவர்கள் அரசியலில் இறங்கி உள்ளனர்.

அரசியல் நிலவரம் பற்றி அவர்கள் 2 பேருக்கும் நிறைய தெரியும். அவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல. தெளிவான கருத்து, விசாலமான அரசியல் அறிவு படைத்தவர்கள்.

அரசியல் நிலவரத்தை முழுமையாக அறிந்தவர்கள். அரசியல் பற்றி தெரிந்த பிறகுதான் அவர்கள் அதில் ஈடுபட்டுள்ளனர்’ என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg