Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலவசத் திட்டங்கள் என்ற பெயரில் முறைகேடுகள்: விஜயகாந்த் குற்றச்சாட்டு

In இந்தியா
Updated: 06:16 GMT, Jan 13, 2018 | Published: 05:17 GMT, Jan 13, 2018 |
0 Comments
1112
This post was written by : Vithushagan

தமிழ்நாட்டில் இலவசத் திட்டங்கள் என்ற பெயரில் மக்களின் வரிப்பணத்தில் முறைகேடு நடப்பதாக தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தமிழ் நாட்டில் அறிமுகப்படுத்துள்ள இலவச திட்டக்கங்கள் தொடர்பில் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் ,” தமிழ்நாட்டில் 1 கோடியே 98 லட்சத்து 76 ஆயிரத்து 68 குடும்ப அட்டைகள் உள்ளன. 34 ஆயிரத்து 887 ரேஷன் கடைகள் உள்ளன. இவற்றின் மூலம் ரேஷன் கார்டுகளுக்கு விலையில்லா பொருட்கள் வழங்கப்படுகின்றன.

ஒரு கார்டுக்கு 3 முறை விலையில்லா இலவசப் பொருட்கள் வழங்கப்பட்டதா? அல்லது ஒரே குடும்பம் 3 குடும்ப அட்டைகளை வைத்துக்கொண்டு, விலையில்லா பொருட்களை பெறுகிறதா? என்பதை போர்க்கால அடிப்படையில் ஆய்வுசெய்து பதிலளிக்க வேண்டும்.

இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க தமிழக அரசும் மாவட்ட ஆட்சியர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg