Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உலகக்கிண்ண தொடரில் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்திய அணி

In கிாிக்கட்
Updated: 05:33 GMT, Jan 13, 2018 | Published: 05:33 GMT, Jan 13, 2018 |
0 Comments
1215
This post was written by : Elakkiya
1436224880blind-cricketers-L

டுபாயில் நடைபெற்றுவரும் பார்வையற்றோருக்கான உலகக்கிண்ண கிரிக்கட் தொடரில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி வெற்றியை பதிவு செய்துள்ளது.

நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற லீக் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்ய துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 40 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 282 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்டத்தில் நிசார் அலி 63 ஓட்டங்களையும் ஜமீல் 94 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

தொடர்ந்து 283 என்ற ஓட்ட இலக்குடன் துடுப்பாட்டத்தில் களமிறங்கிய இந்திய அணி 34.5 ஓவர் நிறைவில் 3 விக்கெட் இழப்புக்கு 285 ஓட்டங்களை பெற்று வெற்றியை தனதாக்கியது. இந்திய அணியின் சார்பில் துடுப்பாட்டத்தில் தீபக் மாலிக் 79 ஓட்டங்களையும் வெங்கடேஷ் 64 ஓட்டங்களையும் அஜய் ரெட்டி 47 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)